இந்திய சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெயர் எடுத்தவர் பாக்கியராஜ். இவருடைய ஒவ்வொரு படங்களிலும் சில்மிஷம் கலந்த சிரிப்பு இருக்கும். பெண்கள் எல்லாம் எப்படி இவரது படங்கள் பார்ப்பார்கள் என்ற விமர்சனம் எழும்போதெல்லாம் இவருடைய படத்திற்கு பெண்கள் கூட்டம் அலை மோதுவதை பார்த்து அடங்கிவிடும்.
அந்த காலத்தில் அதிக பெண் ரசிகைகளை வைத்திருந்த நடிகர்களில் இவரும் ஒருவர். பாக்கியராஜ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பாக்யராஜ் பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியிருந்தாலும் அந்த படங்களில் அவர் பயன்படுத்திய முருங்கைக்காய் தான்.
முதலில் இயக்குனராக தடம்பதித்த பாக்கியராஜ் பின்னர் ஹீரோவாகவும் பல வசூல் வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய சினிமாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்கும் இயக்குனர்களில் ஒருவரான பாக்கியராஜ் ஏன் ரஜினி, கமல் போன்றோரை வைத்து படம் இயக்கவில்லை என்ற கேள்வியை கேட்டுள்ளனர்.
அதற்கு பாக்கியராஜின் பதில் இதுதான். இயக்குனராக வித்தியாசமான கதைகளை எடுத்துக் கொண்டிருந்த நான், ஹீரோவான பிறகு தனக்கு சீரியசான கதைகள் வராது என தனக்குதானே நிறைய காமெடிகளை சேர்த்துக்கொண்டு கதை எழுத ஆரம்பித்து விட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தன்னைத் தாண்டி மற்ற நடிகர்களை வைத்து படம் இயக்க யோசிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். பிறகு நடிகராக மார்க்கெட் குறைந்த பிறகு விஜயகாந்தை வைத்து சொக்கத்தங்கம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தேன். அதன் பிறகு ரஜினி, கமலுக்கு படம் இயக்கலாம் என்ற வகையில் அவர்களது சினிமா வேறு பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்ந்து அவர்களை தொடர்பு கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கமலின் சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கு திரைக்கதை எழுதியது, ரஜினியின் நான் சிவப்பு மனிதன் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்ததை தவிர இருவருக்கும் தனியாக படம் இயக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். பாக்யராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் நடித்திருந்தால் அந்த படம் எப்படி இருந்திருக்கும் என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.