கிரிக்கெட் போட்டிகளில் கட்டை போட்டு விளையாடுவது என்பது ஒரு தனி கலை. அது அனைவராலும் செய்ய இயலாது. அதற்கென்று ஒரு பொறுமையும், அர்ப்பணிப்பும் வேண்டும். அவ்வாறு பொறுமையாக ஆமை போல் விளையாடிய 5 வீரர்களை நாம் பட்டியலிட்டுள்ளோம்.
5.ராகுல் டிராவிட்.
இந்தியாவின் பெருஞ்சுவர் என்றழைக்கப்படும் ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு பல போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்துள்ளார். பல வேகப்பந்து வீச்சாளர்களை சோர்வடைய செய்துள்ள ராகுல் டிராவிட்,2007ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் 96 பந்துகளை சந்தித்து வெறும் 12 ரன்களை எடுத்து ரசிகர்களையும் வெறுப்படையச் செய்து போட்டியை டிரா செய்தார்.
4.ஏபி டிவில்லியர்ஸ்.
இவர் ஒரு ஒருநாள் போட்டி வீரர். டெஸ்ட் போட்டிகளில் இவரைத் தேர்வு செய்வதே கிடையாது, ஆனால் இவரை ஏன் தேர்வு செய்யவில்லை என்னும்படி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். 2015ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் இவர் 244 பந்துகளை சந்தித்து வெறும் 25 ரன்கள் எடுத்து வெறுப்பு ஏற்றினார். அந்த சமயத்தில் இவரது விளையாட்டு மிகவும் ஆச்சரியப்படக் கூடிய ஒரு சம்பவமாக இருந்தது.
3. யாஸ்பால் சர்மா.
இவர் ஒரு இந்திய வீரர். 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். ஒருமுறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடந்த ஒரு போட்டியில், 157 பந்துகளுக்கு வெறும் 13 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தார். இவரது இந்த ஆட்டம் அந்த காலகட்டத்தில் பெரிதாகப்பேசப்பட்டது.
2.ஹனிப் முகமது.
இவர் பாகிஸ்தான் அணி வீரர். 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி12 சதங்கள் அடித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முதலில் முச்சதம் அடித்த முதல் வீரர் இவரே. இவர் ஒருமுறை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 223 பந்துகளுக்கு வெறும் 20 ரன்களை எடுத்துள்ளார். 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பாகிஸ்தான் அணியில் இவர் 20 ரன்கள் எடுத்துள்ளார். இவரின் இந்த பொறுமையான ஆட்டத்தால் குறைந்த ரன்கள் அடித்தாலும் போட்டியை டிரா செய்தது பாகிஸ்தான் அணி.
1.ஜெப் அல்லாட்.
நியூசிலாந்தை சேர்ந்த பந்துவீச்சாளர் இவர். 1999 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 621 ரன்களை குவித்தது. பின்னர் 320 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணியின் 10-வது விக்கெட்டாக களமிறங்கிய ஜெப் அல்லாட் 77 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டானார். இதுவரை இவர் ஆடிய இந்த இன்னிங்சை யாரும் முறியடிக்கவில்லை.