தமிழ் சினிமாவில் பொருத்தவரை எப்போதுமே ஹீரோக்களுக்கு மட்டும் தான் ரசிகர்கள் மத்தியில் பாராட்டும் வரவேற்பும் கிடைக்கும். ஆனால் சமீப காலமாக பல ரசிகர்கள் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டதால் கட்டுக்கோப்பாக உள்ள வில்லன் நடிகர்களையும் பிடித்துள்ளது.
அர்னால்டு எப்படி சினிமாவிலும் ஆர்மியிலும் இருந்தாரோ அதேபோல் இந்த ஒரு நடிகரும் முதலில் ஆர்மி தற்போது சினிமாவிலும் கலக்கிக்கொண்டு வருகிறார்.
அப்படி கலக்கிக்கொண்டு வருபவர்தான் மிஸ்டர் இந்தியா பட்டத்தை 7 முறை பெற்ற காமராஜ். இவர் அர்னால்டு இடம் பரிசு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம், ஆனால் ஐ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அர்னால்டு நேரில் பார்த்து பேச மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. இவரின் சாதனை பார்த்து மிரண்டு விட்டாராம் அர்னால்டு.
இவர் சினிமாவில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வர வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார். ஆனால் அதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதற்காக ஒரு சில வாய்ப்புகள் மட்டும் தான் கிடைத்துள்ளது.
சமீபத்தில் கூட இவருக்கு சுல்தான் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். தொடர்ந்து ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரம் நடித்து வருவதாகவும் விரைவில் தான் நினைத்தபடியே ஹீரோவாக ஏதாவது ஒரு படத்தில் நடித்து விடுவேன் என மன உறுதியில் உள்ளார்.