சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

1 ரூபாய் மூலம் வித்தையைக் காட்டும் சிம்பு.. இதுக்கு ஒரு சென்டிமென்ட் இருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெற்றிக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு நடிகர்தான் சிம்பு இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை

ஆனால் ரசிகர்களின் ஆதரவால் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது சிம்பு நம்பிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படம்தான் மாநாடு.

இப்படத்தின் மூலம் சிம்பு பழையபடியே இளமையாக நடித்துள்ளார். சமீபகாலமாக இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டது பார்த்து ரசிகர்களும் இப்படத்தின் மீது அதிகப்படியாக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

simbu-cinemapettai-01
simbu-cinemapettai-01

சிம்பு பொருத்தவரை தனக்கு மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடிய ஒரு நபர் சாந்தமாக பேசுவார், கோபமாகவும் பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும்.

சிம்பு தனது கோபத்தை குறைத்துக் கொள்வதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு வித்தையை பயன்படுத்தி வருகிறார். அது வேறு ஒன்றும் இல்லை இவருக்கு ஏதாவது ஒரு கோபம் வந்தால் கையில் 1 ரூபாய் காயினை எடுத்து வைத்து கொஞ்ச நேரம் அதையே பார்த்தபடி இருப்பாராம்.

பின்பு அந்த 1  ரூபாய் காயினை தூக்கி எறிந்து விடுவார் அதற்கு காரணம் இந்த கோபம் அந்த 1 ரூபாய் காயின் மூலம் சென்று விடுவதாக நினைத்துக் கொள்வாராம்.

இப்படி ஒரு வித்தியாசமான வித்தையை பயன்படுத்தி வருகிறார் சிம்பு இதனை அவர் பலமுறை அவரது பேட்டிகளில் கூறியுள்ளார். இதுவும் ஒரு நல்ல விஷயம் தானப்பா!

Trending News