செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வரும் அடுத்த சிவகார்த்திகேயன்? முதல் படமே 3 பாகமாம்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றி நடிகர்களை உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறது விஜய் டிவி. அந்த வகையில் தற்சமயம் பலபேர் சினிமாவுக்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கின்றன.

விஜய் டிவியில் இருந்த பல நட்சத்திரங்கள் சினிமாவில் சாதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், புகழ் போன்றோர் தங்களுக்கான சினிமா பாதையை தேர்ந்தெடுத்து அதில் கவனமாக சென்று கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் அடுத்ததாக விஜய் டிவியில் அழகிய தமிழ் மகன் சின்னத்திரை நிகழ்ச்சியில் சாதனை தமிழ் மகன் விருது பெற்ற ராஜேஷ் கனகசபை என்பவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக அடியெடுத்து வைத்துள்ளார்.

இவர் நடிக்கும் படத்திற்கு கொற்றவை என பெயர் வைத்துள்ளனர். மேலும் இந்த படம் பிரமாண்ட பொருட்செலவில் மூன்று பாகங்களாக உருவாக உள்ளதாம். இந்த படத்தை மாயவன், கேங்க் ஆஃப் மெட்ராஸ் போன்ற படங்களை இயக்கிய சிவி குமார் இயக்கி வருகிறார்.

சிவி குமார் இயக்குனர் ஆவதற்கு முன்னரே தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார். அதிலும் பீட்சா, சூது கவ்வும் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைக் குவித்தது.

சிவகார்த்திகேயன் போல் இவரும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பாரா என விஜய் டிவி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என பொருத்திருந்து பார்ப்போம்.

vijay tv fame rajesh-kanagasabai-turns-into-hero
vijay-tv-fame-rajesh-kanagasabai-turns-into-hero

Trending News