வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

3 தலைமுறை நடிகருடன் நடித்த ஒரே பிரபலம்.. நாடக நடிப்பை பார்த்து அழைத்து வந்த எம்ஜிஆர்

தமிழ் சினிமாவில் ஆயிரம் காமெடி நடிகர்கள் வந்தாலும் ஒரு சிலர் மட்டுமே தமிழ் ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடிப்பார்கள். அப்படி தனக்கென ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நாகேஷ்.

இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே இவரது காமெடி ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். அதனால் இவரது நடிப்பிற்கும் , காமெடிக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்த நாகேஷ் 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் ஒரு முறை மேடை நாடகத்தில் வயிறு வலிப்பது போல் நடித்துள்ளார். அப்போது எம்ஜிஆர் இவரது நடிப்பை பார்த்து அசந்து போய் சினிமாவிற்கு அழைத்து வந்துள்ளார்.

mgr nagesh
mgr nagesh

பின்பு அவரது படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க வைத்துள்ளார். 1958ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றன.

கமலுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் கமல் படங்களில் அதிகமாக நாகேஷ் நடித்திருப்பார். இவர்களது கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தது.

1961 ஆம் ஆண்டு வெளிவந்த தாயில்லா பிள்ளை இவருக்கு ஒரு சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது. அதன்பிறகு வெளியான நெஞ்சில் ஒரு ஆலயம் திரைப்படம் இவரை சினிமாவின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. சர்வர் சுந்தரம் இவரது நடிப்பிற்கு விருது வாங்கி கொடுத்த திரைப்படம். அப்படி தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஆட்டி படைத்தவர் தான் நாகேஷ்.

- Advertisement -spot_img

Trending News