தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்போது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக பெரும் தோல்வியை சந்தித்து வருகின்றன.
என்னதான் தோல்வி படங்களை கொடுத்தாலும் அவரது ரசிகர்கள் சிம்புவை விட்டுக்கொடுக்காமல் இன்னமும் அவருக்கு ஆதரவாக துணை நின்று வருகின்றனர்.
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்தும் வகையில் வெற்றி பெற்றது.

தற்போது அவரது ரசிகர்கள் மாநாடு திரைப்படத்தை முழுவதுமாக நம்பி உள்ளனர். அதற்கு காரணம் அப்படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது சிம்பு அவரது சமூக வலைதளப் பக்கத்தில் சூரியனை பார்த்தபடி சட்டையில்லாமல் ஜிம் பாடி ஆக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வைரலாகி வருகிறது.