தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிம்புவின் ஆரம்ப காலகட்டங்களில் வந்த காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் சார்மி. அடிப்படையில் தெலுங்கு நடிகையான இவர் இந்தியிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார்.
தென்னிந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வந்த சார்மி கவர்ச்சியில் எந்த எல்லைக்கும் சென்று நடிக்கக் கூடியவர். அதன் காரணமாகவே இவரது காட்டில் அளவுக்கு அதிகமாக பண மழை பொழிந்தது.
கடந்த சில வருடங்களாக நடிப்பதில் இருந்து ஒதுங்கிய சார்மி படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக விஜய் தேவர் கொண்டா நடிக்கும் லிகர் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் தொடர்ந்து சார்மி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால் கடுப்பான சார்மி தன்னுடைய திருமணம் பற்றி முதல் முறையாக ஓபன் ஆக பேசியுள்ளார்.
சார்மி தனக்கு இப்போது மட்டுமல்ல எப்போதுமே திருமணம் வேண்டாம் எனவும், இன்னொருவருக்கு அடிபணியும் எந்த ஒரு வேலையும் நான் செய்யமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் திருமணம் செய்தால் நிறைய விஷயங்களை இழக்க வேண்டிவரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்தில் ஆசை இல்லாத என்னைப் பற்றி தொடர்ந்து தேவையில்லாத விஷயங்கள் வெளிவருவதால் இது பற்றி கூற வேண்டியுள்ளது எனவும், சிங்கிளாக இருப்பதே ஜாலியாகத்தான் இருக்கிறது எனவும் வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.
