தமிழ் சினிமாவில் ராஷ்மிகாவிற்கு என்று ரசிகர் பட்டாளம் உள்ளது. எப்போது அவர் தமிழில் நடிப்பார் என்று ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, சுல்தான் படத்தின் மூலம் அந்த ஆசையை நிறைவேற்றினார்.
தற்போது ராஷ்மிகா மந்தனாவிற்கு ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எதற்கும் அவர் ஓகே சொல்வதில்லையாம்.
சினிமாவின் ஆரம்ப காலத்தில் முதலில் நடிகைகளுக்காக படம் ஓடும். ஆனால் காலப்போக்கில் அது அப்படியே மாறிவிடும் திறமை இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
அதனை புரிந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா இனிமேல் நான் எந்த மொழியில் படம் நடிப்பதாக இருந்தாலும் முதலில் அந்த மொழியில் சரளமாக பேசக்கூடிய அளவிற்கு திறமை வளர்த்துக் கொண்டு தான் நடிப்பேன் என கூறியுள்ளார்.
அதற்குக் காரணம் ஆரம்ப காலத்தில் பல நடிகைகளும் வாய்ப்பு கிடைத்தால் போதும் என படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார்கள். ஆனால் நடிகையின் குரலுக்கு டப்பிங் செய்யும் போது வாய்ஸ் சரியாக அமையாவிட்டால் அதுவே படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும்.
அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்பு கிடைக்காது. அதனால்தான் ராஷ்மிகா மந்தனா மற்ற நடிகைகள் செய்த தவறை நான் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.