சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து எப்படியும் எம்எல்ஏ ஆகிவிடுவார் என கனவு கண்டு கொண்டிருந்த உலகநாயகன் ரசிகர்களுக்கு இறுதி வரையில் கமல் வெற்றிக் கனியை சுவைப்பது போல் வந்து ஏமாற்றிவிட்டார்.
முதல் முயற்சியிலேயே இவ்வளவு தூரம் வந்ததாக கமலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இன்னும் சிலரோ ஆண்டவரே நமக்கு அரசியல் வேண்டாம், சினிமாவுக்கு வந்து விடுங்கள் என கூக்குரலிட்டு வருகின்றனர்.
அவர்களது வாக்கும் பலித்துவிட்டது. தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த உள்ளாராம் உலகநாயகன் கமலஹாசன். அந்த வகையில் அடுத்ததாக இந்தியன்2 படமா? அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படமா? என்பதுதான் கேள்வியாக இருந்தது.
லைகா நிறுவனத்திற்கும் சங்கருக்கும் இடையில் மிகப்பெரிய பஞ்சாயத்து சென்று கொண்டிருக்கும் நேரத்தில் அந்தப் பிரச்சனையில் தலையிட்டு முடித்து வைக்கலாம் என கமல் ஹாசன் ஆசைப்பட்டாராம்.,
ஆனால் லைகா நிறுவனத்தின் பேச்சு கமலை மேலும் கோபப்படுத்தியதாக தெரிகிறது. கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என பேசுறீங்க, நீங்களே சங்கரிடம் பேசி ஒரு நல்ல முடிவா எடுங்க என கைகழுவி விட்டு விட்டாராம்.
இந்நிலையில் அடுத்ததாக உலக நாயகன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் ஒரு பக்கம் கமலஹாசன் நடத்திவந்த மக்கள் நீதி மையம் கட்சியிலிருந்து சில முக்கிய பிரமுகர்கள் விலகியதும் அவருக்கு மன ரீதியாக சோகத்தை கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறுகின்றனர்.
