கனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் அருண்ராஜா காமராஜ்(arunraja kamaraj). சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர். இவர் இயக்குனராவதற்கு முன்பே பாடலாசிரியராகவும் பாடகராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
அதுமட்டுமில்லாமல் சில படங்களில் காமெடி நடிகராகவும் வலம் வந்துள்ளார். கனா என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை வைத்து ஆர்டிகல் 15 பட ரீமேக்கை இயக்கி வந்தார்.
இந்நிலையில் அவருக்கும் அவரது மனைவி சிந்துஜாவுக்கும் சமீபத்தில் கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென அவரது மனைவி உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார்.
இது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. வெறும் 38 வயதான சிந்துஜா கொரானா தொற்று காரணமாக இறந்தது அனைவருக்கும் உயிர் பயத்தை காட்டியுள்ளது.
அருண்ராஜா காமராஜ் பிரபலம் என்பவரையும் தாண்டி தனக்கு நெருக்கமானவர்களிடம் சகஜமாக பழகக் கூடிய ஆள் எனவும் பலர் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் யாருக்குமே கெடுதல் நினைக்காத நல்ல உள்ளம் கொண்டவர் எனவும் கூறுகின்றனர். இப்படிப்பட்ட நல்ல மனிதனுக்கு கட்டிய மனைவியை தொட்டுக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இந்த நோய்த்தொற்று செய்து விட்டதே என அனைத்து ரசிகர்களும் கண்ணீர் வடிக்கின்றனர்.
அவருக்கும் குரானா தொற்று இருப்பதால் குரானா தொற்று பரவாமல் இருக்க மருத்துவர்கள் கொடுத்த உடையை அணிந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்திய புகைப்படம் அனைவரையும் மனம் கலங்க வைத்துவிட்டது. மேலும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.