ஷங்கர் பட வாய்ப்பு கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும் என கனவு கண்டுகொண்டிருந்த 28 வயது நடிகையை கழட்டி விட்டுவிட்டு வேறு ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்து விட்டதாக வெளியான செய்தி கேட்டு நடிகை செம அப்செட்டாம்.
இந்தியன் 2 படத்தின் பஞ்சாயத்துக்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் அடுத்தடுத்த படங்களை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளார் இயக்குனர் ஷங்கர்.
பிரமாண்ட இயக்குனரின் பெயர் கடந்த சில மாதங்களாக படு டேமேஜாகி வருகிறது. அதற்கு காரணம் இந்தியன் 2 படத்தை குறித்த தேதியில் எடுத்துக்கொடுக்காமல் இழுத்தடிப்பது தான். ஆனால் சங்கர் தரப்போ தயாரிப்பாளர்கள்தான் வேண்டுமென்றே பிரச்சனை செய்வதாக கூறிவருகிறார்.
ஒரு பக்கம் கோர்ட் கேஸ் என அலைந்து கொண்டிருக்கும் ஷங்கர் இன்னொரு பக்கம் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படம், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் என தொடர்ந்து பிசியாக இருக்கிறார்.
இந்த இரண்டு படங்களிலும் சங்கர் தனக்கு தான் வாய்ப்பு கொடுப்பார் என பெரிதும் நம்பியிருந்தார் கியாரா அத்வானி. பாலிவுட் நடிகையாக இருந்தாலும் தெலுங்கு தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிச்சயமானவர் தான்.
சங்கர் முதலில் அவரிடம் பேசி படங்களுக்கு ஒப்பந்தம் செய்து விட்டதாகவும், ஆனால் அதன்பிறகு ராம்சரண் நடிகை ஆலியா பட்டுக்கு சிபாரிசு செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஷங்கர் பட வாய்ப்பு கை விட்டுப் போனதால் தற்போது அப்செட்டில் இருக்கிறாராம் கியாரா அத்வானி.