தமிழ் சினிமாவில் எத்தனை நடிகர்கள் போட்டியாக களத்தில் குதித்தாலும் கமலஹாசனின் நடிப்பால் அனைத்து நடிகர்களையும் ஓரங்கட்டி விடுகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் ஒரு சண்டை காட்சிக்காவே ஓடியது. அதன் பின் விஸ்வரூபம் 2 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகி மோசமான தோல்வியை அடைந்தது.
லோகேஷ் கனகராஜ் பலமுறை தனக்கு சினிமாவில் குரு என்றால் கமலஹாசன் தான் எனக் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் கமலஹாசன் படத்தை பார்த்துதான் நான் சினிமாவிற்கே வந்தேன் எனவும் கூறினார்.
தற்போது தனது குருநாதரான கமலஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்குவதால் படத்திற்கான நடிகர்களை கச்சிதமாக தேர்வு செய்து வருகிறார். வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஃபகத் பாசில் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சினிமா வட்டாரத்தில் அரசியல்வாதியாக தான் நடிக்க உள்ளார் என கூறியுள்ளனர்.
தற்போது நிஜ அரசியல்வாதியாக கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே பகத் பாசில் நடித்த சில OTT படங்களை பார்த்து மிரண்டே போய்டாரம் கமல். இந்நிலையில் அவருக்கு இணையாக படத்தில் ஃபகத் பாசில் நடித்துள்ளதால் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.