ஒரு காலத்தில் இந்தி படங்களின் தாக்கம் தான் தென்னிந்திய சினிமாவில் அதிகமாக பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் ஹிந்தி படத்தையும், பாடல்களையும் தென்னிந்திய ரசிகர்களும் ரசித்து கேட்டனர். அதனால் ஒரு காலத்தில் ஹிந்தி சினிமா தான் தென்னிந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
ஆனால் தென்னிந்திய சினிமாவில் எப்போது மெல்லிசை பாடல்கள் வந்ததோ அப்போதே இந்தி சினிமாவின் தாக்கம் ஒவ்வொன்றாக குறைந்தது. அதற்கு காரணம் இளையராஜாதான். இளையராஜா இசையில் மெல்லிசை பாடல்கள் தென்னிந்திய சினிமாவில் அதிகம் ஒழிக்கப்பட்டது. இவரது பாடல்கள் கொடிகட்டி பறக்க ரசிகர்கள் அதன்பிறகு ஹிந்தி படத்தின் பாடல்களில் அதிக கவனம் செலுத்தவில்லை.
அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவின் தாக்கம் அதன்பிறகு ஹிந்தி சினிமாவில் பார்க்கப்பட்டது. ஒரு காலத்தில் ஹிந்தி படங்களின் தாக்கம் தான் தென்னிந்திய சினிமாவில் அதிகமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது அப்படியே மாறிவிட்டது.
அமீர்கான் நடிப்பில் வெளியாகி ஹிந்தி சினிமாவில் முதன் முதலில் 100 கோடி வசூல் பெற்ற திரைப்படம் கஜினி. இப்படம் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் ரீமேக். இதுவரைக்கும் கோடிகளில் வசூல் சாதனை படைக்காமல் இருந்த ஹிந்தி சினிமாவில் முதன் முதலில் 100 கோடி வசூல் சாதனை படைத்தவர் ஏ ஆர் முருகதாஸ்.
அதன்பிறகு அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான ரவுடி ராத்தோர் திரைப்படமும் தெலுங்கு சினிமாவில் வெளியான விக்ரமார்குடு படத்தின் தழுவல். ஹிந்தி சினிமாவில் புகழ் பெற்ற படமான ஹவுஸ்ஃபுல் இன் மூன்று பாகங்களும் தென்னிந்திய சினிமாவில் தாக்கம்தான் அதிகம் இருந்தது.
ஹவுஸ்புல் படத்தின் முதல் பாகம் தமிழில் பிரபுதேவா மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான காதலா காதலா படத்தின் மேலோட்ட தழுவலாக பார்க்கப்பட்டது. அவர்களின் இரண்டாம் பாகம் மலையாளத்தில் வெளியான மாட்டுப்பட்டி மச்சான் படத்தின் தழுவல். ஹவுஸ்புல் படத்தின் மூன்றாம் பாகம் தமிழ் பட இயக்குனர் சுபாஷ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இருந்தார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படம் தான் ஹிந்தியில் அக்ஷய தேவனுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது. அதேபோல் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான சிம்பா திரைப்படமும் தெலுங்கில் ஜூனியர் நடிப்பில் வெளியான டெம்பர் திரைப்படத்தின் தழுவல்.
ரோகிட் ஷெட்டி இயக்கிய படங்கள் அனைத்திலும் 70% தென்னிந்திய சினிமா படங்களைத்தான் ரீமேக் செய்திருந்தார். அதற்கு காரணம் தென்னிந்திய சினிமாவின் வெற்றி தான், இந்த வரிசையில் அர்ஜுன் ரெட்டி, துப்பாக்கி ஆகிய படங்களும் இடம் பெற்று உள்ளது.