வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கைவிட்ட விஜய் டிவி.. பழைய குருடி கதவை திறடி என மீண்டும் சன் டிவியிடம் தஞ்சமடைந்த பிரபலம்!

விஜய் டிவி சீரியல் மூலமாக பல பிரபலங்களை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர் தான் அசீம். இவர் ஜெயா டிவியில் முதல்முறையாக மாயா என்ற சீரியலில் நடித்தார்.

அதற்குப் பின்னர் விஜய் டிவியில் ‘தெய்வம் தந்த வீடு’ என்ற சீரியலில் நடித்திருப்பார். இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியின் பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் சீரியல் தான்.

இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம். அதுமட்டுமில்லாமல் பகல் நிலவு சீரியலில் நடித்த ஷிவானியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளிவந்ததால் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

azeem-cinemapettai-01
azeem-cinemapettai-01

பிக் பாஸ் சீசன் 4-கில் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் விஜய் டிவி நம்பினால் வேலைக்காகாது என்பது போன்று பழைய குருடி கதவை திறடி என்று சன் டிவிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.

arun-twit
arun-twit

ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பூவே உனக்காக சீரியலின் கதாநாயகன் விலகிக் கொள்வதாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். தற்போது அசீம் அதே சீரியலில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் அதற்கான படப்பிடிப்புகளும் போய்க் கொண்டிருக்கிறதாம். சன் டிவியில் பிரியமானவள் சீரியல் அசீம் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News