தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்கரவர்த்தியாக ஒரு காலத்தில் இருந்தவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு போட்டியாக பல விருதுகளையும் பாராட்டுகளையும் வாங்கிக் குவித்தவர் கமல்ஹாசன். அன்றைய காலத்தில் இவர்கள் இருவரும் மட்டும்தான் தமிழ்சினிமாவின் தூண்களாக இருந்துள்ளனர்.
அப்போதெல்லாம் ரஜினி, கமல்ஹாசன் நெருங்க முடியாத அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்தனர். அதுவும் 30 வருடமாக ரஜினி வைத்திருந்த சாம்ராஜ்யத்தை பிரபல நடிகர் ஒருவர் முறியடித்து விட்டார். இந்த விஷயம் தமிழ் சினிமா உலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு வாழ்த்துக்களும் பிரபலங்கள் கூறிவருகின்றனர்.

அதாவது வசூலில் ரஜினி வைத்திருந்த சாதனையை 30 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய் முறியடித்துள்ளார் என்ற தகவல் தான் இன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆக உள்ளது. அந்த பட்டியலில் நீண்ட வருடங்களுக்கு ரஜினிகாந்த் ஓரங்கட்டியது மட்டுமில்லாமல் நடிகர் விஜய்யின் 4 திரைப்படங்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்தது. ஒரே நடிகரின் படங்கள் 4 முறை இடம்பெற்றுள்ளது இதுவே முதல் முறை.
- Bahubali2
- Bigil
- Master
- Viswasam
- Sarkar
- Mersal
தமிழ்நாட்டில் வசூல் சாதனையாக பார்க்கப்படும் படங்களில் நடிகர் விஜயின் படங்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. இதற்கு சான்றாக பல நாட்களுக்கு முன்பே படம் எடுக்கப்பட்டு ஊரடங்கு தளர்வு பின்பு வெளியான மாஸ்டர் திரைப்படம் கூட வசூல் சாதனை படைத்தது.
தமிழ்நாட்டில் வசூல் சாதனையில் முன்னணியில் இருப்பது விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தான். அதன்பிறகு பாகுபலி 2 , பிகில், சர்க்கார், விஸ்வாசம் மற்றும் மெர்சல் ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளன.
தற்போது இந்த தகவலை சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் விஜய்க்கு கூறிவருகின்றனர்.