சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் இரண்டு பேருக்கு மிகப்பெரிய எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதில் ஒருவர் முன்னால் சீரியல் நடிகையும், இன்னாள் சினிமா நடிகையுமான வாணி போஜன்.
அவரைத் தொடர்ந்து பெரிய அளவில் பெயர் பெற்றது என்றால் அண்ணியார் கதாபாத்திரம் தான். இவரது உண்மையான பெயர் ரேகா. பல வருடங்களாக சீரியலில் இருந்தாலும் தெய்வமகள் சீரியல் தான் இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் நடித்து வருகிறார். தெய்வமகள் சீரியல் பார்த்து விட்டு ரேகாவை திட்டாத தாய்மார்களே கிடையாது. அந்த அளவுக்கு வெறுப்பையும் சம்பாதித்து வைத்திருந்தார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு தொலைக்காட்சி சீரியல்களிலும் இவரை பார்க்க முடியவில்லை. ஏன் என்று கேட்டதற்கு சிலகாலம் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம் என முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணியாரே என அன்போடு அழைக்கப்படும் ரசிகர்களுக்கு தன்னுடைய பழைய சீரியல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பார்ப்பதற்கு செம அழகாக பருவ மொட்டு போல் இருக்கிறார்.

1998 ஆம் ஆண்டு கன்னடத்தில் உருவான சீரியலில் நடித்துள்ளார் ரேகா. மேலும் அந்த சீரியலை பார்க்க வேண்டும் என்றால் பொம்மி டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.