தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. எப்படி தமிழ் சினிமாவில் இவருக்கு நிறைய படவாய்ப்புகள் வந்ததோ அதே அளவு தெலுங்கிலும் அதிகமான பட வாய்ப்புகள் வர தெலுங்கு தேசத்திற்கு குடியேறினார்.
அங்கு பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார். ஒரு காலத்தில் கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்து வந்த ஸ்ருதிஹாசன் சமீபகாலமாக நல்ல கதை இருந்தால் மட்டும்தான் நடிப்பேன் என கூறி வருகிறாராம் அதற்கு காரணம் தன்னுடைய அப்பா எனவும் தெரிவித்துள்ளார்.
அதாவது கமல்ஹாசன் எப்போதுமே எப்படிப்பட்ட படம் என்பதை விட எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்பதை பார்த்து தான் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வார். அப்படி கமல்ஹாசன் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதில் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் கொண்டாடினர்.
அதனால் ஸ்ருதிஹாசன் தற்போது முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால் பல இயக்குனர்களும் தங்கள் படத்தில் இருக்கும் முக்கியமான கதாபாத்திரத்தை ஸ்ருதி ஹாசனிடம் கூறி வருகின்றனர். சமீபகாலமாக சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
அப்போது ரசிகர்கள் பல்வேறு விதமான கேள்விகள் எழுப்ப ஒரு ரசிகர் உங்கள் அப்பா கமல்ஹாசன் நடித்ததில் உங்களுக்கு எந்த படம் ரொம்ப பிடிக்கும் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சற்றும் யோசிக்காமல் மகாநதி படம் என தெரிவித்துள்ளார். மேலும் அபூர்வ சகோதரர்கள் மற்றும் விருமாண்டி போன்ற படங்கள் ரொம்ப பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. அதனால் தற்போது உற்சாகத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.