திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

பிக்பாஸ் விட்டு விலகிய தயாரிப்பு நிறுவனம்.. காரணம் கேட்டு விஸ்வரூபம் எடுத்த கமல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் ஆதரவால் கோடிக்கணக்கில் வசூலை பெற்று வருகின்றன. அதுமட்டுமில்லாமல் கமலஹாசன் நடித்த அனைத்து படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றன.

ஆனால் சமீபத்தில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதன் காரணமாக முழு நேர தொகுப்பாளராக மாறினார் கமல்ஹாசன். அதுமட்டுமில்லாமல் அவருடைய தனித்துவமான பேச்சாலும், போட்டியாளர்கள் மீது வைக்கும் நாசுக்கான விமர்சனங்களும் ரசிகர்களிடம் பெரிய அளவு வரவேற்கப்பட்டன.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரித்து வந்த Endemol Shine  நிறுவனம் வெளியேறி உள்ளதாகவும். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் 5 வது சீசன் கமல்ஹாசன் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிறுவனம்தான் பிக்பாஸ் காப்பிரைட் வாங்கி உலகம் முழுவதும் ஒளிபரப்பி வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துவதில் இவர்கள் வல்லவர்கள் என்று தான் கூறவேண்டும் எந்த பிரச்சனை இருந்தாலும் அதை அசால்ட்டாக சமாளித்து விடுவார்கள்.

biggboss-5-tamil-cinemapettai
biggboss-5-tamil-cinemapettai

பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரித்த Endemol Shine  நிறுவனம்  Banijay எனும் பிரெஞ்சு நிறுவனம் வாங்கி விட்டதாகவும் உலகம் முழுவதும் பல கிளைகளை வைத்திருக்கும் இந்நிறுவனம் விஜய் டிவி  நிகழ்ச்சிகளை சமீபகாலமாக தயாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து உரிமைகளும் Banijay நிறுவனத்துடன் உள்ளது. இந்நிறுவனம் கமல்ஹாசன் ராஜ் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து ஒரு சில வெப் சீரியஸ்களை தயாரிக்க இருப்பதாக முடிவு செய்துள்ளன. இந்தத் தகவலை அரசல்புரசலாக தெரிந்தவர்கள்தான் பிக் பாஸ் 5 சீசனை கமல்ஹாசன் தயாரிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் கமல்ஹாசன் தயாரிப்பதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர்.

Trending News