செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

இப்ப கிளப்புங்க பிரச்னையை.. தம் அடிக்குற ஸ்டைலில் பதில் சொன்ன விஜய்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் மூவியின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தில் தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, யோகி பாபு இன்னும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு முடிந்தபின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தளபதியின் பிறந்த நாள் அன்று செகண்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது சன் பிக்சர்ஸ். இரண்டாவது போஸ்டரில் தளபதி விஜய் சிகரெட்டுடன் போஸ் கொடுத்திருக்கிறார் என்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

அனல் பறக்க கையில் துப்பாக்கியுடன் இருக்கும் தளபதி விஜய் வாயில் வைத்திருப்பது சிகரெட் இல்ல புல்லட் என்பது கூர்ந்து பார்த்தாலே தெரியும். ஆனால் சில ஊடகங்கள் சர்க்கார் சர்ச்சை போல் இது சிகரெட் என்று தளபதி படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

தளபதியின் பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த சர்ச்சைக்கு விடை தற்போது கிடைத்துள்ளது.

பீஸ்ட் படப்பிடிப்பை முடித்த பின் தளபதி விஜய் தனது 66வது படத்தை தெலுகு இயக்குனருடன் தொடங்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-65
vijay-65
- Advertisement -spot_img

Trending News