பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நூறு பேர் மட்டும் கலந்து கொள்ள வேண்டிய திருமண நிகழ்ச்சி என்பதால் முக்கியமான விருந்தாளிகளை மட்டும் அழைத்துள்ளார் சங்கர்.
இதைத் தவிர சென்னையில் வைத்து ரிசப்ஷன் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சங்கரின் மாப்பிள்ளை ரோஹித் தாமோதரன் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர். ஏற்கனவே ஷங்கர் இந்தியன் 2 பட பிரச்சினையில் இருப்பதால் திருமணம் முடிந்தபின் அதற்கான வேலைகளில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
