பதினைந்து வருஷம் ஆச்சு, மீண்டும் அது நடக்கணும்.. சிம்புவுக்கு கோரிக்கை வைத்த இயக்குனர்

தற்போது உடல் எடையை குறைத்து விட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு வந்திருக்கும் சிம்புவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து ஒரு டஜன் படங்கள் வெளிவர இருக்கின்றன.

அதில் முதலில் வெளியாக இருப்பது வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் மாநாடு திரைப்படம் தான். அதனைத் தொடர்ந்து கௌதம் மேனனுடன் நதிகளில் நீராடும் சூரியனே, மிஷ்கினுடன் ஒரு படம், இயக்குனர் ராமுடன் ஒரு படம் என வரிசை கட்டுகின்றன.

இந்நிலையில் ஒரே ஒரு மலையாளப் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சிம்புவிடம் ஒரு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

சிம்பு மற்றும் யுவன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான். மாநாடு படத்தில் பணியாற்றி இருக்கலாம் ஆனால் சிம்பு இயக்கி நடிக்க வேண்டும் எனவும், அதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

simbu-yuvan-combo
simbu-yuvan-combo

கடைசியாக சிம்பு இயக்கத்தில் யுவன் இசையில் வெளிவந்த திரைப்படம் வல்லவன். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் இன்னமும் இருவரது கூட்டணிக்கும் எதிர்பார்ப்பு என்பது குறையவே இல்லை.

இடையில் கூட சிம்பு ஒரு ஹாலிவுட் படம் எடுக்கப் போவதாகவும், அந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதோடு அந்த செய்தியின் தாக்கம் அடங்கிவிட்டது. மீண்டும் இந்த கூட்டணிக்கு எல்லோருமே வெயிட்டிங் தான்.