தமிழில் சூது கவ்வும் தர்மதுரை போன்ற வெற்றிப்படங்களின் நாயகன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
கடந்த முதல் அலை ஊரடங்கு காலத்திலும் க/பெ ரணசிங்கம் படத்தை ஓடிடியில் வெளியிட்டு தன் கலைப்பயணத்தை தொடர்ந்தவாரே இருந்து சேதுபதிக்கு இப்போது சின்னத்திரையில் ஒரு வாய்ப்பு தரப்பட்டது.
சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தான் அது. படத்தின் கதை மற்றும் கதைக்களத்திற்காக பல்வேறு ஒர்க் அவுட்களை செய்து உடல்வாகை மாற்றியமைக்கும் மக்கள் செல்வன் இப்போது இந்த நிகழ்ச்சிக்காகவும பல்வேறு ஒர்க் அவுட்களை செய்து வருகிறார்.
எந்த உடலமைப்பில் வரப்போகிறார் என்பது அவர் திரையில் வரும் பொழுது தான் காண முடியும்.இந்த நிலையில் வேங்கை, சுறா நாயகி தமன்னா விஜய் சேதுபதி தொகுப்பாளராகும் அதே நிகழ்ச்சியில் பெண் தொகுப்பாளராகிறார்.
அதில் ஒரே ஒரு சிறிய மாறறம் தமன்னா வரவிருப்பது தெலுங்கில் ஜெமினி டிவியில் தான். இருபெரும் நட்சத்திரங்களும் முதல் முறையாக சின்னத்திரை தொகுப்பாளர்களாக அறிமுகமாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.