ஒருகாலத்தில் சிம்பு படமா என அசால்டாக இருந்தவர்கள் இப்போதெல்லாம் சிம்பு படம் எப்ப வருது என எதிர்பார்க்கும் அளவுக்கு தன்னுடைய நடை உடை பாவனை அனைத்தையும் மாற்றி நல்ல பையனாக நடந்து கொள்கிறார்.
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாநாடு திரைப்படம் அடுத்ததாக வெளியாக உள்ளது. ஆனால் அதற்கு முன்பே சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்த மகா படம் வெளியாக உள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் இந்த படம் நேரடி ஓடிடி வெளியீடு எனவும் கூறி வருகின்றனர். ஹன்சிகாவின் 50வது படமான மகா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் கஞ்சா அடிப்பது போல இருந்த புகைப்படம் பரபரப்பை கிளப்பி சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து தன்னுடைய முன்னாள் காதலரான சிம்புவுடன் ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. இப்படி மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த படம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சாயத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.
இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் மோதலால் படம் குறித்த தேதியில் வெளியாக முடியவில்லை. இந்நிலையில் எல்லாம் ஒருவழியாக சமாதானமடைந்து விரைவில் மகா படத்தின் டீசர் வெளியாக உள்ளதாம்.
வாலு படத்திற்கு பிறகு மீண்டும் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து நடிப்பதால் இந்த டீசரை அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். முதலில் சில நிமிட கெஸ்ட் ரோலில் நடிக்க வந்த சிம்புவின் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் மேலும் காட்சிகளை சேர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.