கமல், வெற்றிமாறன் படம் இப்படித்தான் இருக்குமாம்.. இணையத்தில் கசிந்த தகவல்

தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது வெற்றிமாறன் மற்றும் கமலஹாசன் கூட்டணி தான். இது உண்மையாலுமே சாத்தியமா, அல்லது வேறு ஏதாவது பேசும்போது இந்த செய்தியை கிளப்பி விட்டுவிட்டார்களா என்பது இன்னமும் புரியாமல் விழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் வெற்றிமாறன் மற்றும் கமல் இருவரும் இணைந்து படம் செய்வது கிட்டத்தட்ட உறுதியான தகவல் தானாம். நடிப்பின் பல்கலைக்கழகம் கமலஹாசன். நடிப்பில் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தொழில்நுட்ப கலைஞராகவும் தன்னை மெருகேற்றி வைத்துள்ளார்.

அதேபோல் ஒரு நாவலை படித்து அதற்கு திரைக்கதை அமைத்து படமாக்குவதில் கில்லாடிதான் நம்ம வெற்றிமாறன். இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் தோல்வி கொடுக்காத இயக்குனராக வலம் வருகிறார்.

kamal-vetrimaaran-cinemapettai
kamal-vetrimaaran-cinemapettai

வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படத்தின் வெற்றி தனுஷுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு இருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை எனும் படத்தை இயக்கி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து பல படங்கள் வெற்றிமாறன் வரிசையில் இருந்தாலும் கமல்ஹாசனுடன் ஒரு படம் இணைந்து செய்வதில் ஆர்வமாக இருக்கிறாராம். அந்த படம் தேவர் மகன் போல் ரத்தமும் சதையுமாக இருக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருக்கிறாராம் வெற்றிமாறன்.

அப்படி மட்டும் அந்தக் கூட்டணி இணைந்துவிட்டால் சொல்லவே வேண்டாம், அந்தப் படம்தான் அந்த வருடத்திற்கான அனைத்து விருதுகளையும் வாங்கும். அதேபோல் தேசிய விருது வாங்கவும் வாய்ப்பு இருக்கிறது என பேச்சுக்கள் அடிபடுகின்றன.