இந்திய கிரிக்கெட் அணியில் பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். உதாரணத்திற்கு சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், தோனி மற்றும் விராட் கோலி போன்ற இந்திய அணிக்காக பாடுபட்ட வீரர்களும் உள்ளனர்.
இவருக்கு அடுத்தபடியாக இவர்களுக்கு தூணாக பல கிரிக்கெட் வீரர்கள் பல இடங்களில் தங்களது திறமைகள் மூலம் பல ரன்களைக் குவித்து இந்திய அணியை வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சத்தேஷ்வர் புஜாரா. 2010லிருந்து சர்வதேச போட்டிகளில் இந்தியாவிறாகாக விளையாடும் புஜாரா டெஸ்டை பொறுத்தவரை கில்லி தான்.
டிராவிட் மற்றும் லட்சுமனனிற்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் ஆடுவதற்கு ஆள் இல்லாமல் தவித்த இந்திய அணிக்கு கிடைத்த புதையல் இந்த புஜாரா தான்.
ஐ.பி.எல் சீசன்களில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடிய புஜாரா சர்வதேச அளவிலான மொத்த போட்டிகளில் 77இ ன்னிங்கஸ் விளையாடி 5840 தனிநபர் ஸ்கோராக இந்தியாவிற்காக சேர்த்துள்ளார்.
இதுவரை டெஸ்ட் மேட்ச்சில் ஆட்டம் இழக்காமல் 206 ரன்கள் இவரின் அதிகபட்ச ஸ்கோராக வைத்துள்ளார். இவருக்கு பதிலாக இந்திய அணியில் கே.எல்.ராகுல் சேர்க்கப்பட வாய்ப்புண்டு. ஒரு காலத்தில் பூஜாராவை ராகுல் டிராவிட் எனவும் அழைத்து வந்தனர்.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் கே.எல்.ராகுல் டெஸ்டில் எந்த அளவிற்கு சரியாக வருவார் என்பது சிந்திக்க தக்கதே….