தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு அவர்களின் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருக்கும். அப்படி டாப் ஹீரோ டாப் இயக்குனர்கள் காம்போவில் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் டிராப்பான படங்கள் ஏராளம். அப்படிப்பட்ட படங்களில் சிலவற்றின் லிஸ்ட்டை பார்க்கலாம்.
தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில்ஆரம்பிக்கப்பட்ட ராணா, ஜக்குபாய் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட சுல்தான் தி வாரியர் ஆகிய படங்கள் பல்வேறு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதேபோல், கமல் நடிப்பில், கமல் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட மருதநாயகம், மர்மயோகி, சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. மேலும், விஜய் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் யோஹன் அத்தியாயம் ஒன்று படமும், சீமான் இயக்கத்தில் உருவான பகலவன் ஆகிய படங்களும் பல்வேறு காரணங்களால் டிராப்பானது.

அஜித் நடிப்பில், உருவான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மிரட்டல், ஏ.பி.ரவிராதா இயக்கத்தில் மகா, சரவண சுப்பையா இயக்கத்தில் இதிகாசம் ஆகிய படங்கள் பல்வேறு காரணங்களால் டிராப்பானது.

சூர்யா நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட கெளதம் மேனன் இயக்கத்தில் சென்னையில் ஒரு மழைக்காலம், ஹரி இயக்கத்தில் அருவா ஆகிய படங்கள் பல்வேறு காரணங்களால் டிராப்பானது.

விஜய் சேதுபதி நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட சுதாகர் இயக்கத்தில் சங்குதேவன், ஆனந்த் குமரேசன் இயக்கத்தில் வசந்தகுமாரன், எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் 800 ஆகிய படங்கள் பல்வேறு காரணங்களால் டிராப்பானது.