கடந்த 20 வருட தமிழ் சினிமாவில் இவ்வளவு வேகத்தில் யாருமே வளர்ந்தது இல்லை என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்ற பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
அங்கிருந்து கிடைத்த பட வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு தற்போது கமர்ஷியல் நாயகனாக கலக்கிக் கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற படம் வெளியாக உள்ளது.
எந்த ஒரு நடிகருக்கும் இப்படி ஒரு வளர்ச்சி கிடைத்ததே இல்லை என்கிற அளவிற்கு சிவகார்த்திகேயன் மீது நிறைய பேர் பொறாமையில் இருக்கின்றனர். சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால கட்டத்தில் அவரை சினிமாவை விட்டு துரத்தவும் பல வேலைகள் நடந்தது.
அதையெல்லாம் தாண்டி சிவகார்த்திகேயன் எப்படி தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார் என்று ரசிகர் ஒருவர் சமீபத்தில் சித்ரா லட்சுமணன் என்ற டூரிங் டாக்கிஸ் பிரபலத்திடம் யூடியூப் வாயிலாக கேள்வி கேட்டார்.
அதற்கு சித்ரா லட்சுமணன் கொடுத்த பதில் என்னவென்றால், மக்களின் பேராதரவு தான் அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்க காரணம் என குறிப்பிட்டுள்ளார். டிவியில் இருக்கும்போதே குழந்தைகள் மற்றும் பெண்களை கவர்ந்ததால் பின்னாளில் அதுவே அவருக்கு சாதகமாக மாறி விட்டதாம்.
இது ஒருபுறமிருக்க அந்த வீடியோவில் தனுஷ், சூர்யா போன்றோரை விடவும் அதிக சம்பளத்தை சிவகார்த்திகேயன் வாங்குகிறார் என அவர் கூறியுள்ளது கொஞ்சம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
