லேசா லேசா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திரிஷா. இருப்பினும் விஜயுடன் நடித்த கில்லி படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து விக்ரமுடன் நடித்த சாமி படமும் ஹிட்டானதால் நடிகை திரிஷா முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல் விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த த்ரிஷா, சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வந்தார் வருகிறார்.
மற்ற நடிகைகள் போல் சோசியல் மீடியாவில் அவ்வளவாக தலைகாட்டாத த்ரிஷா எப்போதாவது ஏதேனும் கருத்துக்களை பதிவிடுவார். இந்நிலையில் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் முடிவு செய்து சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட உள்ளார். இதற்காக புதிதாக சைக்கிள் ஒன்றை வாங்கிய த்ரிஷா சைக்கிளில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும், “நீங்கள் ஒரு சிறந்த மனநிலையில் இருந்தால் உங்களால் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொள்ள முடியும்” என பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திரிஷாவின் அழகை புகழ்ந்து வருகின்றனர்.