சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்ற அதிசய நிகழ்வு.. பொறுமையிழந்து 11 வீரர்களும் செய்த காரியம்!

ஒரு கிரிக்கெட் அணி என்றால் குறைந்தது நான்கு பந்துவீச்சாளர்கள், இரண்டு,முன்று ஆல்ரவுண்டர் இருப்பார்கள். ஒருநாள் போட்டிகளில் இந்த விகிதத்தில் ஒரு அணி இருந்தால் நிச்சயமாக நல்ல அணியாக செயல்படும். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு கொஞ்சம் அதிகமாகவே தேவைப்படும். டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் விளையாடப்படும். ஒருநாள் மற்றும் டி-20 போன்ற விளையாட்டுகளின் முடிவை ஓரளவிற்கு கணிக்க முடியும் ஆனால் டெஸ்ட் போட்டியை பொருத்த வரை அதனை கணிக்க முடியாது.

அப்படி பவுலர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் போட்டிகள் பல சாதனைகளும், சரித்திரங்களும் நிறைந்துள்ளது. அந்தவகையில் ஒரு போட்டியில் 11 வீரர்களும் பந்து வீசி அசத்தியுள்ளனர். இது ஒருமுறை மட்டும் நிகழவில்லை நான்கு முறை நிகழ்ந்துள்ளது. அந்த நான்கு அணிகளையும். இதில் காணலாம்.

தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள்: 2005 ஆம் ஆண்டு நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 588 ரன்களை குவித்தது. அதன்பின் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்து 747 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்கள் ரன் அடித்துக் கொண்டே செல்வதை கண்டு பொறுமை இழந்த தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அனைவரும் தாமாக முன்வந்து பவுலிங் வீசினார்கள். இருப்பினும் இறுதி வரை அவர்கள் 235 ஓவர் பிடித்து போட்டியை டிரா செய்தனர். அந்த போட்டியில் பந்து வீசிய ஏபி டிவில்லியர்ஸ் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Abd-Cinemapettai-2.jpg
Abd-Cinemapettai-2.jpg

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள்: 2002ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 513 ரன்களை குவித்திருந்தது. அதன்பின் தனது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 248 ஓவர்களை சந்தித்து மொத்தமாக 629 ரன்களை குவித்தது. இறுதிவரை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்களை அவுட் செய்வதற்காக ஒவ்வொரு இந்திய அணி வீரர்களும் பந்து வீசினார்கள்.

India-Cinemapettai.jpg
India-Cinemapettai.jpg

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து: 1884 ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் 311ஓவர்களை மட்டை போட்டு விளையாடியது ஆஸ்திரேலியா அணி. அதன் காரணமாக இங்கிலாந்து அணியில் இருந்த அனைத்து வீரர்களும் வந்து பந்துவீச தொடங்கினார்.

England-Cinemapettai.jpg
England-Cinemapettai.jpg

 

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான்: 1980ஆம் ஆண்டு முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 617 ரன்களை குவித்தது.போட்டியை எப்படியாவது டிரா செய்து விட வேண்டும் என்று நினைத்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தஸ்லிம் ஆரிப் மற்றும் ஜாவத் ஆகிய இருவரும் நீண்ட நேரம் பேட்டிங் செய்து கொண்டே இருந்தனர். இவர்களது விக்கெட்டை கைப்பற்ற நினைத்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் வந்து பந்துவீசினர்.

11bowlers-Cinemapettai.jpg
11bowlers-Cinemapettai.jpg

Trending News