இயக்குனர் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான கார்த்தி தனது நடிப்புத் திறமையால் நவரச நாயகனாக உருவெடுத்தார். பல வெற்றி படங்களில் நடித்த கார்த்தி தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது வீட்டில் உடற்பயிற்சி செய்யும் போது திடீரென கீழே விழுந்ததில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் நடிகர் கார்த்தியின் காலில் அறுவை சிகிச்சை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால், எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது ஸ்கேன் மூலம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் கார்த்திக் தற்போது குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் தீ அவன், அந்தகன் ஆகியப் படங்கள் தற்போது கார்த்திக்கின் கைவசம் உள்ளன.