திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

செக்க சிவந்த வானம் படத்தில் அருண் விஜய், சிம்பு முதல் சாய்ஸ் இல்லையாம்.!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றும் இயக்குனர் என்றால் அது இயக்குனர் மணிரத்னம் மட்டுமே. இவரது படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

அதேபோல் இவரது படங்களில் இடம்பெறும் பாடல்களும் நிச்சயம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுவிடும். முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் உள்ள மணிரத்னம் படத்தில் நடிக்க பல நடிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இவர் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் தான் செக்க சிவந்த வானம். இப்படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

dulquer-cinemapettai
dulquer-cinemapettai

இப்படம் விமசர்ன ரீதியாவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில், சிம்பு மற்றும் அருண் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் யார் என்பது குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

இப்படத்தில், சிம்பு மற்றும் அருண் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் துல்கர் சல்மான் மற்றும் பகத் பாசிலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இவர்கள் இருவராலும் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

Trending News