வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒரே இன்ஸ்டா போஸ்ட்டில் கோடிகளை அள்ளும் கிரிக்கெட் வீரர்கள்.. கரன்சியில் மிதக்கும் அதிரடி ஆட்டக்காரர்கள்

கிரிக்கெட் போட்டிகள் என்பது நமது நாட்டில் பணம் சம்பாதிக்கும் ஒரு விளையாட்டாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீரர்களுக்கும் அவரவர் திறமைக்கேற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதிலும் நல்ல திறமையுள்ள வீரர்களை சில விளம்பர கம்பெனிகள் வளைத்துப் போடுகின்றன. வெளிநாட்டு கம்பெனிகள் பல இந்திய வீரர்களை பணத்தின் மூலம் தங்களது கம்பெனியின் ப்ராடக்ட் விற்பனைக்கு பயன்படுத்திக்கொள்கின்றன.

சமூக வலைதளப் பக்கங்கள் ஆன இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவைகளும் இந்திய வீரர்களுக்கு பணத்தை வாரி கொடுக்கின்றன. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கம் இந்திய வீரர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறது என்பதை பட்டியலிட்டுள்ளனர்.

ஏபி டிவில்லியர்ஸ்: தென்னாபிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விராட் கோலி தலைமையில் விளையாடியவர். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போடுவதற்கு INR 58,47,053 ரூபாய்களை பெறுகிறார்.

AB-Cinemapettai-1.jpg
AB-Cinemapettai-1.jpg

ஹர்திக் பாண்டியா: ஆரம்ப காலத்தில் வறுமையின் பிடியில் இருந்த ஹர்திக் பாண்டியா இன்று கோடிகளில் புரளும் ஒரு விளையாட்டு வீரர். தற்போது அவரிடம் பல சொகுசு கார்கள், விலை உயர்ந்த மொபைல் போன்கள், கை கடிகாரங்கள் உள்ளன. இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு செய்யும் ஒரு போஸ்ட்டிற்காக INR:65,94,622.80 ரூபாய்களை பெறுகிறார்.

Pandya-Cinemapettai.jpg
Pandya-Cinemapettai.jpg

ரோகித் சர்மா: இந்திய கிரிக்கெட் அணியில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களுள் ஒருவர் ரோகித் சர்மா: ஆரம்ப காலத்தில் சில சறுக்கல்களை சந்தித்து தற்போது நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார். இவர் தனது ஒரு பதிவிற்காக இன்ஸ்டாகிராமில் INR: 76,01 ,638.62 ரூபாய்களை பெறுகிறார்.

Rohit-Cinemapettai.jpg
Rohit-Cinemapettai.jpg

மகேந்திர சிங் தோனி: இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனான மகேந்திர சிங் தோனி மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்றுத் தந்தவர். இந்திய அணிக்காக நிறைய இளைஞர்களை உருவாக்கிக் கொடுத்தவர். இவர் தனது ஒரு பதிவிற்காக இன்ஸ்டாகிராமில் INR:1,44,47 ,726.04 ரூபாய்களை பெறுகிறார்.

Ms-Dhoni-Cinemapettai.jpg
Ms-Dhoni-Cinemapettai.jpg

விராட் கோலி: கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என அனைவராலும் பாராட்டப்படும் விராட் கோலி ஒரு ஆக்ரோஷமான வீரர். இவர் இன்ஸ்டாகிராமில் 132 மில்லியன் தொடர்பாளர்களை தன் வசம் வைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தான் பதிவு செய்யும் ஒரு பதிவிற்காக INR: 5,08,47,000 ரூபாய்களை பெறுகிறார்.

Virat-Cinemapettai-3.jpg
Virat-Cinemapettai-3.jpg

Trending News