திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிரபல சீரியலுக்கு வந்த செல்வராகவன் மனைவி.. உங்களுக்கே இந்த நிலைமையா.?

வெள்ளி திரையில் பிரபலமாக இருக்கும் பல நடிகை நடிகர்கள் சின்னத்திரையிலும் தங்களுடைய பயணத்தை தொடர்வது இயல்பாகிவிட்டது. திரைப்படங்களை விட தொடர்களின் மூலமாக ரசிகர்களை எளிமையாக சென்றடைய முடியும்.

பல முன்னணி நடிகர்கள் தொடர்களில் நடித்து வருகிறார். ராதிகா, ரம்யா கிருஷ்ணன் ,வடிவுகரசி, சிவகுமார், தேவயானி ,விஜயகுமார் ,அமலா போன்ற பலர் முழு தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘அபியும் நானும்’ சீரியல் நடிகை “நந்திதா” அவர்கள் ஒரு கெஸ்ட் ரோல் பண்ணி இருப்பாங்க இப்போது புதிதாக இன்னொருவர் கெஸ்ட் அப்பியரன்ஸ் தர இருக்கிறார்.

sonia-agrwal

காதல் கொண்டேன் என்றாலே நம் நினைவிற்கு வருவது தனுஷ் ,”திவ்யா, திவ்யா “என்று பாடுவது தான். இப்போது தொலைக்காட்சி சீரியல்களில் வரப்போகிறவர் நடிகை சோனியா அகர்வால் தான். செல்வராகவனின் முதல் மனைவி சோனியா அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது. 2K  கிட்ஸ் ஃபேவரிட் ஹீரோயினாக வலம் வந்தவர்.

தமிழ் திரை உலகில் பெரும்பான்மையான திரைப்படங்களில் நடித்துள்ளார் சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படம் மூலம் அறிமுகமானவர் மனதை கவர்ந்தவர். அதைத்தொடர்ந்து கோவில், மதுரை, 7ஜி ரெயின்போ காலனி, திருட்டு பயலே போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் .

அதை தொடர்ந்து சோனியா அகர்வால் சின்னத்திரையில் பயணித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் “நாணல் “புதுயுகம் தொலைக்காட்சியில்” மல்லி :போன்ற தொடர்களில் நடித்தார். இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டவர் இல்லம்” என்ற நாடகத்திலும் பாலிமர் தொலைக்காட்சியில் “நினைத்தாலே இனிக்கும்” போன்ற தொடர்களிலும் கெஸ்ட் ரோல் வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Trending News