சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஃபிட்னஸ் ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட ஆண்ட்ரியா.. என்னம்மா ஒர்க்அவுட் பண்றாங்க.

தமிழ் சினிமாவின் பாடகி மற்றும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் கெளதம் மேனன் இயக்கிய ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னை திறமையான நடிகை என நிரூபித்து அசத்தினார். அதேபோல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் இவர் பாடிய கூகுள் கூகுள் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அறிமுகப் படத்தில் இவரது நடிப்பைப் பார்த்த பின்னர் ஏராளமான பட வாய்ப்புகள் இவரைத் தேடி வந்தன. பெரும்பாலும் கெத்தான, தைரியமான பெண் வேடங்களே அதிகம் தேடி வந்தது. விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை ஆகிய படங்களே அதற்கு சாட்சி. துப்பறிவாளன் திரைப்படத்தில் நெகட்டிவ் வேடத்தில் அசத்தியிருந்தார்.

வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. படத்தில் அழகாக வந்து போகும் நடிகைகளுக்கு மத்தியில் துணிச்சலான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து ஆண்ட்ரியா நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு2 படத்தில் பேயாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. என்னதான் படங்களில் தைரியமான பெண்ணாக நடித்து வந்தாலும், மற்றொரு பக்கம் அழகான, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து தன்னுடைய பிட்னஸுக்கு இதுதான் காரணம் என கூறாமல் கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் என்னம்மா ஒர்க் அவுட் பண்றாங்க என வாய் பிளந்து வருகிறார்கள்.

Trending News