ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

மலையாளத்தில் ஹிட்டான படத்தை கையில் எடுக்கும் கெளதம் மேனன்.. மரண ஹிட்க்கொடுத்த படமாச்சே!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்கனராக வலம் வருபவர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கிய படங்கள் இன்றளவும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது. இவர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் என்றால் அது விண்ணைத் தாண்டி வருவாயா படம் தான்.

இப்படத்தை தற்போது வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தில் நடிகை த்ரிஷா ஜெர்சி என்ற கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். அந்த அளவிற்கு இவரது படங்களில் கதாப்பாத்திரங்கள் தத்ரூபமாக நடித்து இருப்பார்கள்.

இந்நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘நாயட்டு’ படத்தின் தமிழ் ரீமேக்கை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மலையாளத்தில் மார்ட்டின் பிரக்டின் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘நாயட்டு’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

nayattu
nayattu

தற்செயலாக ஒரு குற்றத்தில் ஈடுபட்ட பின்னர் தப்பியோடும் 3 போலீஸ்காரர்களின் போராட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. திரையரங்கில் வெளியான அப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் போதே கேரளாவில் கொரோனா தொற்று அதிகமானதால் தியேட்டர்கள் மூடப்பட்டது.

அதையடுத்து அந்தப் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியது. அதன் பிறகு இந்தியா முழுவதும் அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே படத்தின் தமிழ் மற்றும் இந்தி ரீமேக் உரிமைகளுக்கு அதிக போட்டி வந்தது.

தற்போது நாயட்டு படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News