ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

கிரிக்கெட் வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகள்.. அடிப்பதற்கு பாய்ந்த கங்குலி.!

களத்தில் விளையாட்டு வீரர்கள் ரொம்ப சீரியஸாக இருந்தாலும் டிரெஸ்ஸிங் ரூம் சென்றவுடன் அதனை விட்டுவிட்டு கொஞ்சம் கலகலப்புக்கு மாறி விடுவார்கள். அப்படி சில வீரர்கள் இந்திய அணியிலும் உண்டு. அப்படி வீரர்கள் செய்த குறும்புத்தனத்தை இதில் பட்டியலிட்டுள்ளோம்.

சௌரவ் கங்குலி விரட்டியது: யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், விரேந்திர சேவாக், மூவரும் போலியான ஒரு செய்தித்தாளை தயார் செய்து அதில் கங்குலி கண்டபடி பேசுவதாகவும், தன்னுடைய தலைமைப் பொறுப்பை மன அழுத்தத்தின் காரணமாக ராகுல் டிராவிட்டிடம் விட்டுக் கொடுத்ததாகவும் எழுதப்பட்டது. இதனை படித்த கங்குலி தாம் இவ்வாறு பேட்டி கொடுக்கவில்லை என்று கோபத்தின் உச்சத்துக்கு சென்று விட்டாராம். அதன்பின் தான் யுவராஜ், ஹர்பஜன் மற்றும் சேவாக் செய்த குறும்புத்தனம் அவருக்கு தெரிந்ததாம். உடனே விளையாட்டாக மட்டையை எடுத்துக்கொண்டு மூவரையும் விரட்டினாராம்.

Ganguly-and-yuvi-Cinemapettai.jpg
Ganguly-and-yuvi-Cinemapettai.jpg

டொயோட்டா காரை நிராகரித்தது: அந்நியர்கள் நுழைய தடைசெய்யப்பட்ட டிரெஸ்ஸிங் ரூமிற்குள் 1987ஆம் ஆண்டு நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் நுழைந்து, இந்திய வீரர்களிடம் மேட்ச் பிக்சிங் செய்ய வலியுறுத்தி, அதற்கு பரிசாக ஒவ்வொரு வீரர்களுக்கும் டொயோட்டா காரை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு அப்பொழுது கேப்டனாக இருந்த திலிப் வெண்சர்க்கார் மற்றும் கபில்தேவ் இருவரும் சேர்ந்து தாவூத் இப்ராகிமின் காலரை பிடித்து வெளியே தள்ளினார்களாம்.

Kapil-Cinemapettai.jpg
Kapil-Cinemapettai.jpg

விரேந்திர சேவாக் மற்றும் ஜான் ரைட்: சேவாக் ஒரு முறை இலங்கைக்கு எதிரான போட்டியில் மோசமான ஒரு சாட்டை அடித்து அவுட் ஆகி வெளியேறினாராம். அப்பொழுது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஜான் ரைட் சேவாக்கின் காலரை பிடித்து விட்டாராம். இதனைக்கண்ட கேப்டன் கங்குலி இருவரையும் சமாதானம் செய்துள்ளாராம்.

John-Cinemapettai.jpg
John-Cinemapettai.jpg

யுவராஜ் மற்றும் விராட் கோலி: விராட் கோலி இந்திய அணிக்குள் தேர்வான சமயத்தில் சச்சினின் கால்களில் விழுந்தாராம். அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்று புரியாமல் திகைத்து நின்ற சச்சினுக்கு பின்னர் தான் தெரிந்ததாம் யுவராஜ்சிங் மற்றும் ஹர்பஜன்சிங் இருவரும் சேர்ந்து செய்த குறும்புத்தனம் தான் அது என்று.

Sachin-kholi-Cinemapettai.jpg
Sachin-kholi-Cinemapettai.jpg

Trending News