புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பெட்ரமாஸ் லைட்டேதான் வேண்டுமென்று ஷூட்டிங்கை நிறுத்திய ஆக்சன் கிங்.. ரிலீஸ்க்கு முன்னரே வந்த சோதனை!

பிரபலமாக இருக்கும் முன்னணி நடிகர்கள் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ஒன்றும் புதிதல்ல. சூர்யா, கமல் போன்ற நடிகர்கள் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர். தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியும் புதிய சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த வரிசையில் தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் அர்ஜுனும் களமிறங்க உள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புது நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ள சர்வைவர் நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்க உள்ளார்.

ஒரு தனித்தீவில் போட்டியாளர்களுக்கு பலவிதமான கடுமையான போட்டிகள் வைக்கப்பட்டு அதில் இறுதிவரை சமாளித்துப் போராடும் விதமாக சர்வைவர் என்ற நிகழ்ச்சி உருவாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை முதலில் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார் என சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தான் தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ப்ரோமோ நிகழ்ச்சி படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதில் ஒரு கார் சம்மந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்டடுள்ளது.

arjun-survivor
arjun-survivor

அக்காட்சி சம்மந்தப்பட்ட கார் பிரபலமான விலை உயர்ந்த காராக இல்லை என்பதால் புதுக்கார் வேண்டும் என்று கேட்டு அதற்காக மிகப்பெரிய தொகையை செலவு செய்ய வைத்துள்ளாராம் அர்ஜூன். இதனால் தொலைக்காட்சி தரப்பும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் கடுப்பில் உள்ளார்களாம்.

Trending News