வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இன்னும் நயன்தாராவை மறக்கலையா.? சிம்புவை மரணமாக கலாய்த்து வெளிவந்த போஸ்டர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து இவர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

சிம்பு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு இப்படத்தை அவரது ரசிகர்கள் வெகுவாக காத்திருக்கின்றனர். அதற்கு காரணம் பல வருடங்கள் முன்பு எப்படி சிம்பு இருந்தாரோ அதே போல இப்படத்தில் உடல் எடையை குறித்து முழுவதுமாக தனது கெட்டப்பை மாற்றி உள்ளார்.

சிம்புவிற்கு தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடிப்பதற்கான தகவல்கள் வெளியாகின. தற்போது சிம்பு ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை பற்றி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

படத்தினைப் பற்றிய ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு இரண்டும் நாளை 12 45 மணியளவில் வெளியிடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது. இதனை அறிந்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா உடனே படத்தின் போஸ்டர் வெளியீடும் நேரத்தை ஒப்பிட்டு பார்த்தால் 9 என வந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவின் நம்பர் வந்துள்ளது என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

simbu nayanthara
simbu nayanthara

மேலும் ஒரு சில ரசிகர்கள் சிம்புவின் மனதில் இன்னமும் நயன்தாரா வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால் சிம்பு அதனை வெளிப்படையாக சொல்லாமல் மறைமுகமாக படத்தின் நேரத்திலேயே குறிப்பிட்டு வருகிறார் என கூறி வருகின்றனர். மேலும் நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருவதால் தான் சிம்பு வெளிப்படையாக யாரிடமும் நயன்தாரா மீதுள்ள காதலை கூறாமல் உள்ளார் எனவும் கூறி வருகின்றனர்.

மேலும் ஒரு சிலர் சிம்பு நயன்தாராவை இன்னும் மறக்கவில்லை அதனால் நேரடியாக போய் தன் காதலைக் கூறலாம் தேவையில்லாமல் படத்தின் நேரத்தில் செலவிட வேண்டாம் எனவும் கூறி வருகின்றனர்.தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News