ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

புதிய சரித்திரத்தை உருவாக்கியது பங்களாதேஷ்.. பரிதாபத்திற்குரிய நிலையில் ஆஸ்திரேலிய அணி!

ஆஸ்திரேலிய அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறது. ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் மோசமான நிலையில் உள்ளது ஆஸ்திரேலியா.

முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், வங்கதேச அணி 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. நேற்று மூன்றாவது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

நிதானமான ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர் முடிவில் வெறும் 127/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில்முகமதுல்லா சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். அடுத்துக் களமிறங்கியவர்களில் ஹோசைன் (19), ஹசன் (11) ரன்களைச் சேர்த்தனர்.

எளிமையான இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியினர் சிறப்பாக விளையாடியதால், எளிதாக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. ஆனால் பங்களாதேஷ் அணியினரின் துல்லியமான பந்துவீச்சால் ஒரு கட்டத்தில் திணறியது ஆஸ்திரேலிய அணி. இதனால், இறுதி ஓவரில் 22 எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்து, 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Bangladesh1-Cinemapettai.jpg
Bangladesh1-Cinemapettai.jpg

இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளை வென்று கோப்பையை கைப்பற்றியதுடன் புதிய சாதனை படைத்தது பங்களாதேஷ் அணி.

Trending News