இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு கொடுக்கும் முன்னுரிமையை போல் வேறு எந்த நாட்டிலும் கொடுப்பதில்லை. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்திய வீரர்கள் கொடுத்துவைத்தவர்கள், கோடியில் தான் சம்பளம். ஆனால் அதற்கு நேர்மாறாக மேற்கிந்தியத் தீவுகள் நாட்டிலுள்ள கிரிக்கெட் போர்டு. எப்பொழுதும் அந்நாட்டு கிரிக்கெட் போர்டில் பிரச்சனைகள் நிறைய இருக்கும்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரச்சினையை ஒரளவு சரி செய்தவர்தான் டூவைன் பிராவோ. 2004 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு அறிமுகமான ஒரு ஆல்ரவுண்டர் தான் பிராவோ. அந்த அணியின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று சொல்லலாம்.
2008-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பிராவோ, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாதியில் நாடு திரும்பினார், அதற்காக தனி ஜெட் விமானம் கொடுத்து உதவினார் அந்த அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி.
2013-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார் டுவைன் பிராவோ. அவர் கேப்டனாக இருந்த காலத்தில் கிரிக்கெட் போர்டில் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. வீரர்களின் 75 சதவீத சம்பளத்தை அணியை மேம்படுத்துவதற்கும், உள்கட்டமைப்புபிற்காகவும் பிடித்தனர். அதனை கேள்விப்பட்ட பிராவோ 2014 ஆம் ஆண்டு இந்திய தொடரை பாதியில் நிறுத்தி விட்டு நாடு திரும்பினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பிசிசிஐயிடம், ட்வைன் பிராவோ இப்பொழுது நாங்கள் போராடவில்லை என்றால் எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்காது தயவுசெய்து உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டார். பிசிசியும் பிரச்சினை செய்யாமல் அவர்களை அனுப்பி வைத்தது. இதனைக் கேள்விப்பட்ட ஐசிசி, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் நியாயமான கோரிக்கையை தீர்த்து வைத்து அவர்களுக்கு முழு சம்பளமும் கிடைக்கச் செய்தது.
இப்படி தைரியமாக போராடிய டுவைன் பிராவோ அதன் பின் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அவர் தனது 27 வயதில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கடைசியாக ஒருநாள் போட்டியில் விளையாடினார். வி வி ரிச்சர்ட்ஸ்,கிலைவ் லாய்ட் செய்ய முடியாததை தனி ஒரு ஆளாக இருந்து செய்து முடித்துள்ளார் டுவைன் பிராவோ.