சன் டிவியில் ஒளிபரப்பான நிலா தொடர் மூலம் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை நேஹா மேனன். அதனைத் தொடர்ந்து வாணி ராணி சீரியலில் நடித்து பிரபலமானார் ஒரு சில குறும் படங்களில் நடித்துள்ள நேகா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார் அதேபோல் ராதிகா நடிப்பில் தொடங்கிய சித்தி-2 சீரியலிலும் நடித்து வந்தார்.
சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். இந்நிலையில், தான் உருவ கேலிக்கு உள்ளாகியதை மிகவும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து நேஹா கூறியதாவது, “இன்ஸ்டாகிராம் பயன்படுத்திய பிறகுதான் உருவ கேலி என்கிற விஷயம் எனக்கு தெரிய வந்தது. ஒவ்வொரு கமென்ட்டை பார்க்கும் போதும் ஆரம்பத்தில் மிகவும் வேதனை அடைந்தேன். நம்மைப் பற்றி கமெண்ட் செய்பவர்களுக்கு நாம் எதனால் எடை போட்டோம், அதனால் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம் என்பதெல்லாம் தெரியாது.
ஏதாவது நெகட்டிவ் கமெண்டுகளை பார்த்தால், அவர்களுடைய கணக்கை பிளாக் செய்துவிடுவேன். அதுபோல கிட்டத்தட்ட 8000 கணக்குகளை பிளாக் செய்திருக்கிறேன். மெசேஜ்களை பார்த்து விட்டு அத்தனையையும் அழித்துவிடுவேன். இப்படி செய்தால் தான் எனக்கு நிம்மதியாக இருக்கும்.
அந்த அளவிற்கு மனஅழுத்தத்திற்கு சென்றேன். இதிலிருந்து மீண்டு வர ஒரு வருடம் ஆனது” என கூறியுள்ளார். பிரபல சீரியல் நடிகைக்கு இந்த நிலமையா என ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒருவரின் உருவத்தை வைத்து கேலி செய்வது மிகவும் தவறானது எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.