தமிழ் சினிமாவில் தொடர்ந்து சர்ச்சை நாயகனாக வலம் வருபவர் என்றால் அது சிம்பு மட்டும் தான். இவரது படங்களுக்கு மட்டும் ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமீபகாலமாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென இவரது படத்திற்கு தயாரிப்பாளர்கள் பிரச்சினை செய்ய தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் வெந்து தணிந்தது காடு என்ற படத்திற்கு தான் பிரச்சனை எழுந்துள்ளது. இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து சிம்புவின் தாயாரும், டி.ஆர்.ராஜேந்திரனின் மனைவியுமான உஷா ராஜேந்தர் ஆவேசமாக பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் உஷா ராஜேந்தர் கூறியுள்ளதாவது, “சிம்பு என்பவர் நடிகர் சங்கத்தில் உள்ள ஒரு உறுப்பினர். அதேபோல் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கும் சிம்புவுக்கும் இடையே பிரச்சனை நடக்கும் போது அது குறித்த பேச்சுவார்த்தை நடக்கும் போது அதில் பெப்சி யூனியன் தலைவர் ஆர்கே செல்வமணி வர வேண்டிய அவசியம் என்ன?.
ஆர்கே செல்வமணியின் பெப்சி யூனியனில் உள்ள 24 சங்கங்களில் நடிகர் சங்கம் கிடையாது. தயாரிப்பாளர் சங்கம் கிடையாது. அப்படி இருக்கும்போது அவர் அழைக்கப்பட்டதில் உள்நோக்கம் இருக்கிறது” இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
வீடியோ பார்க்க லிங்க் கிளிக் செய்யவும்
சிம்பு படத்திற்கு தொடர்ச்சியாக தடைகளை ஏற்படுத்தி வருவதற்கு உஷா ராஜேந்தர் கண்டனம் தெரிவித்து பேசிய இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தனது படங்களுக்கு வரும் பிரச்சனை குறித்து இதுவரை சிம்பு வாய் திறக்காத நிலையில், அவரது தாயார் தனது மகனுக்காக கோபமாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.