வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அப்போது அண்ணன்.. இப்போது தம்பி.. பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளியான சுல்தான் படம் தோல்வியை சந்தித்தது என்று தான் கூற வேண்டும். எதிர்பார்த்த அளவிற்கு படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தற்போது மணிரத்னத்தின் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வம் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதில் வந்தியத் தேவனாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எனவே இப்படம் கைகொடுக்கும் என கார்த்திக் எதிர்பார்த்து வருகிறார்.

சுமார் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க பொன்னியின் செல்வன் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் தனது காட்சிகளை நடித்துக் கொடுத்த கையோடு , இயக்குநர் முத்தையா இயக்க உள்ள புதிய படத்தில் கார்த்தி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

aparna-balamurali
aparna-balamurali

முத்தையா இயக்கிய குட்டிப்புலி, மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, கொடி வீரன் ஆகிய படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் முத்தையாவின் இரண்டாவது படமாக கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

எனவே தனது அடுத்தடுத்த படங்களின் தோல்வியை பூர்த்தி செய்யும் விதமாக வெற்றிப் படத்தின், ஹீரோவுடன் மீண்டும் கூட்டணி செய்ய முத்தையா முடிவு செய்துள்ளதாகவும், முத்தையா, கார்த்தி இணையும் படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நடிகை அபர்ணா முரளியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தம்பிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

Trending News