புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரஜினியின் டயலாக்கை தலைப்பாக வைத்த சிவகார்த்திகேயன்.. என்ன டயலாக் தெரியுமா?

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து அதன் பின்னர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் இவரது தீவிர ரசிகர்களாக உள்ளனர். ஆதமிழ் சினிமானால் இவர் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதை நிரூபிக்கும் விதமாக தனது புதிய படத்திற்கு ரஜினியின் ஃபேமஸ் டயலாக் ஒன்றை தலைப்பாக வைத்துள்ளார்.

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார். டார்க், ரொமான்டிக் காமெடி படமாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வோம் என படக்குழு உறுதியாக இருப்பதால் காத்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து டைரக்டர் ரவிக்குமார் இயக்கும் சையின்ஸ் ஃபிக்சிங் என்டர்டைனர் படமான அயலான் படத்தில் ரகுல் ப்ரீத் சிங்குடன் இணைந்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் வேலைகளும் கிட்டதட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

sivakarthikeyan-cinemapettai
sivakarthikeyan-cinemapettai

என்னதான் அடுத்தடுத்த படங்களின் ஷுட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் இடையிடையே படம் தயாரிப்பு, படங்களுக்கு பாட்டெழுதுவது, பின்னணி பாடுவது போன்ற வேலைகளையும் கவனித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் பிக்பாஸ் கவின் நடித்துள்ள லிஃப்ட் படத்தில் பின்னணி பாடி முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்ததாக விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் ஒரு பாடலை எழுத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அறிமுக இயக்குனரான அசோக் இயக்கும் புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். டைரக்டர் அட்லீயிடம் அசோக் உதவியாளராக பணியாற்றியவராம். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

சிவாஜி படத்தில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்கான சிங்க பாதை என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிங்க பாதை படத்தின் ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளதாம். மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Trending News