திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சூர்யாவிற்காக திரைக்கதையை மாற்றிய இயக்குனர்.. என்ன செய்துள்ளார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகள் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் இயக்குனர் பாண்டிராஜ். கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான பசங்க என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. பள்ளி குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.

இதனையடுத்து அருள்நிதியை வைத்து இவர் இயக்கிய வம்சம் படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அத்தனை படங்களும் வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இதன் மூலம் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.

தற்போது சூர்யாவின் 40வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி.இமான் இசையமைக்க உள்ளர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ராதிகா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் வழக்கமாக தனது பாணியில் குடும்பப் படமாக மட்டும் எடுக்காமல் சூர்யாவின் மாஸ்க்கு ஏற்றவாறு திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம். பாண்டிராஜ் இயக்கத்தில் இந்த படம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

suriya40-cinemapettai-01
suriya40-cinemapettai-01

இயக்குனர் பாண்டிராஜ் குடும்ப படங்களுக்கு பெயர் போனவர் என்று கூறலாம். ஏனென்றால் இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக குடும்ப பெண்கள் இப்படத்தை கொண்டாடினர். இந்நிலையில் சூர்யாவிற்காக தனது திரைக்கதையை மாற்றம் செய்துள்ளது எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை.

Trending News