நயன்தாரா இதுவரை பல நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் விக்னேஷ் சிவன் உடனான காதலை மட்டும் பெருமையாக சமீபத்திய பேட்டியில் போற்றிப் புகழ்ந்துள்ளார் நயன்தாரா.
நடிகர்கள் வளர்ந்து வரும் காலகட்டங்களில் அவர்களுக்கு ஒரு சிலருடன் காதல் வருவது சாதாரண விஷயம். அந்த வகையில் நயன்தாரா தன்னுடைய கேரியரின் ஆரம்பத்தில் சிம்புவுடன் காதலில் இருந்தார்.
அதனைத் தொடர்ந்து உச்ச நடிகையாக வலம் வந்த நேரத்தில் பிரபுதேவாவை காதலித்தார். பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக சினிமாவை விட்டே சில வருடங்கள் விலகியிருந்தார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
அதனை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவனை நீண்டகாலமாக காதலித்து வருகிறார். இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக தெரிவித்துள்ளார் நயன்தாரா. மேலும் விக்னேஷ் சிவனை நான் ஏன் இவ்வளவு காதலிக்கிறேன்? என்பதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
நயன்தாரா கூறுகையில், இதுவரை நான் பார்த்த ஆண்கள் பெரும்பாலும் பெண்களின் வளர்ச்சியை தடுக்கும் சக்தியாகவே இருந்துள்ளனர், குடும்பத் தலைவியாக இருந்தால் மட்டுமே போதும் என நினைக்கிறார்கள். ஆனால் விக்னேஷ் சிவன் மட்டும்தான் பெண்கள் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடியும், அதேநேரம் வேலையிலும் சாதிக்க முடியும் என்பதை எனக்கு புரிய வைத்தார் என்றும், அவருடைய இந்தப் புரிதல்தான் அவர் மீதான காதலை எனக்கு அதிகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.
நயன்தாரா கூறியதை வைத்து பார்க்கையில், சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகிய இருவருமே திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என கட்டளை போட்டிருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.