ஆரம்பத்தில் படத்தின் வசனங்களுக்காகவோ சில அரசியல் சீண்டல்களுக்காகவோ மத மற்றும் சாதிய வண்மத்திற்காகவோ படத்தின் சில காட்சிகள் நீக்கப்படுதலும் சில படங்களே பல்வேறு வழக்குகளுக்கு பிறகு வெளியாவதும் வழக்கமான ஒன்றாக ஒன்றியதே அப்படியான சில படங்களை பட்டியலிட்டுள்ளோம்.
ஒரே ஒரு கிராமத்திலே: 1987-ல் வெளிவந்த இப்படம் நிழல்கள் ரவி -லட்சுமி காம்போவில் குறித்த நேரத்தில் தென்னிந்தியா முழுக்க வெளியானது, ஆனாலும் படத்தின் அமைப்பு மொழியான தமிழில் வெளியாகவில்லை.
காரணமாக ஒரு சாதிய அடிப்படை படம் என கூறப்பட்டது பிறகு உச்சநீதிமன்றம் வரை சென்று படம் சில காட்சிகள் அகற்றப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படம் அந்த ஆண்டிற்கான தேசிய விருதையும் வென்றது.
தி டேவன்சி கோட்: இந்த படம் 2006ல் குறித்த நாளில் உலகம் முழுக்க ளெியானது தமிழ் மொழியில் டப் செய்யபபட்டிருந்தாலும் இந்த படத்தின் சில காட்சிகளுக்காக சில மதக்குழு இயக்கங்களால் போராட்டம் நடத்தப்பட்டது. பிறகு இப்படத்திற்காக தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் தடைவிலக்கு அறிவித்தது.
டாம் 999: 3டி படமான இப்படம் குறித்த தேதிகளில் மற்ற பகுதிகளில் எல்லாம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆனாலும் தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு தடை போடப்பட்டது. இப்படத்தில் காட்டப்படும் ஒரு அனைக்கட்டின் விபரங்கள் முல்லை பெரியார் அனையின் ஒப்பீடில் இருப்பதாக கூறி தடை செய்யப்பட்டது. மேலும் முல்லை பெரியாறு குறித்த அச்சத்தை மக்களிடத்தில் விதைக்க விரும்பவில்லை என வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது.
விஸ்வரூபம்: ஆப்கானித்தானின் இன்றைய நிலையை அப்பட்டமாக காட்டியிருந்த படம் விஸ்வரூபம் ஆனாலும் அதில் இருக்கின்ற மதவாத அடிப்படையிலான காட்சிகளுக்காகவும் மேலும் படத்தை வெளியிடும் வியூகத்தை மாற்றி அமைக்கும் முடிவுகளாலும் இந்த படத்திற்கு பெரிய தடை வந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இப்படம் வெளியிடப்பட்டது.
மெட்ராஸ் காஃபே: இப்படத்தின் நாயகனாக ஜான் ஆப்ரகான் நடித்திருந்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக ஓடிய இப்படம் தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்டது. காரணம் இலங்கை போரை மையப்படுத்திய இப்படத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் கேப்டன் பிரபாகரன் தவறாக சித்தரித்து காட்டியிருப்பர்.
இனம்-சிலோன்: இந்த படமும் அதே போல இலங்கை போரை மையப்படுத்தி எடுக்கப்பட்டதே இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை தவறாக சித்தரிப்பதாய் எழுந்த புகாரில் மாட்டிக்கொண்டது. தமிழ் நாட்டில் பல்வேறு இளைஞர்களால் கொண்டாடப்படும் ஒரு தலைவனை தவறுதலாய் காட்ட முற்படும் இப்படத்தால் பெரும் பிரச்சினை வரும் என்பதால் இப்படத்திற்கு தடையாணை வெளியிடப்பட்டது.