ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

மூன்றாவது காதலருக்கும் வேட்டு வைத்த ஸ்ருதிஹாசன்.. என்ன இப்படி பண்ணிட்டீங்க!

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவரும் தன்னுடைய தந்தையைப் போலவே சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஸ்ருதிஹாசன் தமிழில் குறைந்த படங்களே செய்துள்ளார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு விலகி தன்னுடைய வெளிநாட்டு காதலர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக செல்லும் இடமெல்லாம் கூட கூட்டி சென்றார்.

அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து ஒரு இசைக்கலைஞர் ஒருவருடன் கடந்த சில மாதங்களாக ஊர் சுற்றி வருகிறார். மேலும் அவருடன் பொது இடங்களில் முத்தம் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

நடிகைகள் தங்களுக்கு போரடித்தால் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி சமீபத்தில் ஸ்ருதிஹாசனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் திருமணம் பற்றி கேட்டார். அதற்கு ஸ்ருதிகாசன், கண்டிப்பாக நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை எனவும், 2021 ஆம் ஆண்டு நான் பல கஷ்டங்களை அனுபவித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து தற்போதைய காதலருக்கும் டாட்டா காட்டி விட்டார் என்றே கூறுகின்றனர். முன்னதாக நடிகர் சித்தார்த்துடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாக ஒரு செய்தி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

shruthi-hassan-cinemapettai
shruthi-hassan-cinemapettai
- Advertisement -spot_img

Trending News