வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்த திவ்யதர்ஷினி.. மாலத்தீவு நீச்சல் குளத்தில் டிடி.!

கடந்த சில நாட்களாகவே தமிழ் நடிகைகள் மாலத்தீவுக்கு சென்று தங்களில் போட்டோவை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் விஜய் டிவி புகழ் ஒருவர் தற்போது மாலத்தீவில் நீச்சல்குளத்தில் தான் எடுத்த போட்டோவை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் நடிகை ஹன்ஷிகா மோத்வானி மாலத்தீவில் தான் மோசமான உடையில் இருக்கும் போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றியிருந்தார். இதற்கு லைக்குகளை, ஷேர்களும் குவிந்தது. இதையடுத்து கடந்த வாரம் காஜல் அகர்வால் தனது போட்டோவை வெளியிட்டிருந்தார்.

இவரைத்தொடர்ந்து இரு நாட்களுக்கு முன் ஆண்ட்ரியா மாலத்தீவில் எடுத்த தனது போட்டோவை பகிர்ந்து அனைவரையும் சூடேற்றியிருந்தார். இந்த வாரம் யாருமே மோசமான உடையில் வெளியிடலையே என ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்துள்ளார் டிடி.

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி தான், திவ்யதர்ஷினி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரை தற்போது அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. ஓரிரு முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

dd-dhivyadharshini
dd-dhivyadharshini

சமீபத்தில் கூட, நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கி இருந்தார். அந்த நிகழ்ச்சியில் இவர் நயன்தாராவை விட கவர்ச்சியாக உடை அணிந்திருந்தது பேசுபொருளாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது திடீரென டிடி மாலத்தீவிற்கு அவர் சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட தனது பழைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Trending News